Wednesday, February 20, 2019

பேரம்

”அண்ணே நான் முத்து பேசறேன். லேலண்டு வண்டி இஞ்சின் மாத்துனோம்ல, அதுக்கு ஸ்டீரிங் பம்ப்பு ஹோஸ் வாங்க வந்தேன். 5400 ரூபா சொல்றாங்க”

“ரொம்ப அதிகமாயிருக்கே. விலை கேட்டுப் பாத்தியா?”

“கேட்டேண்ணே. நறுசா கொறைக்க மாட்டேன்றாரு”

“சரி, ஃபோன கடக்காரர்ட்ட கொடு. நான் பேசிப் பாக்கறேன்”

ஃபோனை வாங்கியவர் உடனே பேச ஆரம்பித்தார்

“அண்ணாச்சி, ஸ்பேர் பார்ட்ஸ்ல லாபம் ஒண்ணுமில்ல. ஒரு நாளைக்கு ஐந்நூறு நிக்கும், ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் நிக்கும். மாசம் இருவதாயிரம் நின்னா பெரிய விஷயம். இதுல குறைச்சுக் கேக்காதீக”

“இல்லண்ணே. டிரான்ஸ்போர்ட் தொழில் முன்ன மாதிரி இல்ல. ஒவ்வொர் ரூவாய்க்கும் கணக்குப் பாக்க வேண்டியிருக்கு. நீங்க பாத்து சொல்லுங்க. 5200 போட்டுக்கங்க”

“இல்லண்ணாச்சி. கட்டுப்படியாவாது. நானும் லாரி வச்சிருந்தவன் தான். வச்சுக்க முடியாம கொடுத்துட்டு தான் இதுக்கு வந்தேன்”

“நீங்க வச்சுக்க முடியாமக் குடுத்துட்டீங்க. நாங்க குடுக்க முடியாம வச்சிருக்கோம். அவ்வளவு தான் வித்தியாசம். பாத்து சொல்லுங்க”

எதிர் முனையில் இருந்தவர் வாயடைத்துப் போய்விட்டார். சற்று நேர அமைதிக்குப் பின் “சரி அண்ணாச்சி. 5300 தாங்க.”

இப்படிப் பட்டவர்கள் உங்களிடம் வேலைக்கு இருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை விட்டுவிடாதீர்கள்.

1 comment:

Yblk said...

Super