"அப்பா இன்னிக்கு வாழைக்காய் வறுவல் ரொம்ப நல்லாருந்துச்சு. ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சாப்டுட்டு நல்லா இருந்துச்சுன்னு உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்க"
"அப்பா தான் செஞ்சேன்னு சொன்னியா"
"ஆமா, யாரு பண்ணான்னு கேட்டாங்க. அம்மா ஊருக்குப் போயிருக்காங்க, அப்பா தான் செஞ்சாருன்னு சொன்னேன். அடுத்த வாரமும் செஞ்சு தர்ரீங்களா"
"அடுத்த வாரம் அம்மா வந்துடுவாங்க, பண்ணிக் கொடுக்கச் சொல்றேன்டா"
"ஆனா அம்மா பண்றத விட நீங்க பண்றது தான் நல்லாருக்கு"
"அம்மா கேட்டா உதைப்பாடா"
"நான் ஃபேக்ட தான் சொல்றேன்"
கொஞ்ச நேரத்தில் அவனுக்கே பயம் வந்து விட்டது.
" ஆனா பிஸிபேளா பாத் அம்மா தான் நல்லா செய்வாங்க" என்று ஜாமீன் வாங்கி வைத்து விட்டான்.
இது தான் அந்தப் புகழ்பெற்ற வாழைக்காய் வறுவல்.
No comments:
Post a Comment