Monday, March 02, 2015

அருணகிரி நாதரும் அற்பப் பெண்டிரும்

ஏற்கனவே எழுதிய சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே பதிவின் தொடர்ச்சியாக

குன்றக்குடியில் தைப்பூசத்துக்கு முதல் நாள் தம்பி பையனுக்கு முடி இறக்கப் போயிருந்தோம். முடி இறக்கி முடித்த பின் எல்லோரும் சாமி கும்பிடவும் மாவிளக்கு வைக்கவும் போய்விட்டனர். மலை மேல் இருக்கும் கோயில் என்பதால் நல்ல சிலுசிலுவென்ற காற்று வீசியது. நான் சுற்றுச்சுவரில் எழுதியிருந்த செய்யுள்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் அருணகிரிநாதர் திருப்புகழில் குன்றக்குடி பற்றிப் பாடியது கண்ணில் பட்டது.

பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
     பெருவழி சென்றக் ...... குணமேவிச்

சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
     செயலும ழிந்தற் ...... பமதான

தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
     சிலசில பங்கப் ...... படலாமோ


பிரித்துப் படித்தால்
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய்ப் பெரு வழி சென்று
அக் குணம் மேவி ...

சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிச் செயலும் அழிந்து .

அற்பம் அது ஆன தெரிவையர் தங்கள் கயலை விரும்பிச்
சிலசில பங்கப் படலாமோ

பொருள்:
பிறவியினால் உண்டாகும் சிக்கல்கள் பெருகும்
பொய்யான பெரிய (காம) வழியில் போய் அந்தப் பொய்க் குணத்திலே
பொருந்தி,அதனால் சிறுமை அடைந்து, பெருமை சுருங்கி, செயல்கள் அழிந்து,அற்ப குணமுள்ள மாதர்களின் கயல்மீன் போன்ற கண்ணை விரும்பி, (அதனால்) சில சில அவமானங்களை அடையலாமோ?

ஆண்டாண்டு காலமாய் தமிழ்க் கவிஞன் பெண்ணைப் பார்த்துப் பயந்தே வந்திருக்கிறான் என்பதற்கு இன்னுமொரு சான்று. 

முழுச் செய்யுளும் பொருளும் இங்க

3 comments:

dagalti said...

பொதுவா சித்தர் பாடல்கள்ல வர்றதுதானுங்களே. அருணகிரியார்க்கு வேற - சுய அனுபவ பொதிசுமைகள் நிறைய உண்டு’ங்ற்தால நிறைய வரும்

//தமிழ்க் கவிஞன் பெண்ணைப் பார்த்துப் பயந்தே வந்திருக்கிறான்//

அஞ்சுவதஞ்சாமை பேதமை - பட்டாங்கில் உள்ளபடி!

நடுராத்திரில சுடுகாட்டுல தனியா போகும்போது பாடிகிட்டே ‘பயமில்லாம’ போன உதாரணங்களும் உண்டு:

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
...
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்

- மாணிக்கவாசகர்

அதாவது ரெண்டுமே ஓரளவு இணைய வச்சு சொல்லத்தக்க வை’ன்ற மாதிரி சொல்றார்


அதை ஒரு ஆளு நல்லா ரசிச்சுப் படிச்சா மாதிரி தான் தெரியுது:


கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்
பச்சை ஊன் இயைந்து வேல் படைகள் வந்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்ப தில்லையே

Chenthil said...

நான் சுட்டி கொடுத்துருக்க முந்தைய பதிவையே உங்க கமெண்ட்டா போட்டா எப்படி :-). நீங்க அதப் படிக்கலைன்னு தெரியுதே

dagalti said...



ஆஹா அவமானம்.

உலகத்துலயே இந்த சிந்தனை எனக்கு மட்டும் தான் தோணிச்சாக்கும்’னு பகிர்ற வேகத்துல படிக்காத உட்டேன்.
மன்னிச்சூ.

அதே நேரம், இணையப் பெருவெளில எல்லாம் இங்கிதம் எல்லாம் பார்த்துகிட்டு இருந்தா

எவ்வா றொருவர்க் கிசை விப்பதுவே