தெளிந்து தீவினையைச் செற்றார்
பிறவியின் தீர்வர்'' என்னா,
விளிந்திலா உணர்வினோரும்,
வேதமும், விளம்பவேயும்,
நெளிந்து உறை புழுவை நீக்கி,
நறவு உண்டு நிறைகின்றேனால் -
அளிந்து அகத்து எரியும்
தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்.
என்னமா எழுதியிருக்கான். கிட்கிந்தா காண்டத்துல வாலி செத்ததுக்கப்பறம் ராஜாவான சுக்ரீவன் சீதையைத் தேடித் தரேன்னு ராமனுக்குக் கொடுத்த வாக்கை மறந்து மப்புல கிடக்கான். ராமன் கோபமா லட்சுமணனை அனுப்பறான். இவனால எந்திரிக்கவே முடியலை. அனுமான் டெக்னிக்கா தாரை தலைமைல மகளிர் அணிய அனுப்பி லட்சுமணன் கிட்ட பேசி சமாதானப் படுத்தறான்.
அங்கதன் வந்து திரும்பவும் சுக்ரீவன எழுப்ப, ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலைன்றான். அங்கதன் “உன்ன எழுப்ப முடியல, கட்டிங் போட்டுட்டு குப்புற அடிச்சுக் கிடந்த”ங்கறான். அப்ப சுக்ரீவன் கழிவிரக்கத்துல சொல்ற பாட்டு இது.
அளிந்து அகத்து எரியும்
தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்.
நறவு உண்டு நிறைகின்றேன்
வீட்ல கொழுந்து விட்டு எரியற தீயை நெய் ஊத்தி அணைக்க முயற்சி பண்றது மாதிரி, கட்டிங்க போட்டு நிம்மதியா இருக்க நினைக்கிறேன். அது இன்னும் பத்திட்டு எரியுது.
எத்தனை வருஷம் வேணுமோ இதுல மூழ்கி முத்தெடுக்க.
2 comments:
ப்பா!
உங்க ட்விட்டர் பயோ-வையே ஆட்டிடுவார் இவர்.
வாலி வதை படலத்துல “பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்று”....இப்படியாபட்ட வேலை எல்லாம் இவன் செய்வான் கொன்னுப்புடாதப்பா, அப்படின்னு வாலி ராமன் கிட்ட கேட்டுப்பான்.
வேற எந்த எமோஷன் வந்தாலும் உறுதியா நிக்கிறவன், இந்த சகோதர-கணங்கள்ல ரொம்பவே கலங்கிடுவேன்.
தன்னைக் கொன்ன ராமன் கிட்ட, என் தம்பி கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பார்த்துக்கோப்பா, அப்படுன்னு சொல்றான்.
இதற்குமுன் ராமன் சுக்ரீவனை அணைத்தது பயன் கருதி (அதை வாலியே குத்திக்காட்டுகிறான்). ஆனால் அந்த கணத்திலிருந்து பயனை மீறி ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது வாலியின் வேண்டுகோள்.
இந்தக் கணம் வால்மீகியில் இல்லை. (btw கம்பன்ல, for that matter தமிழக ராமாயாணத்துல இருக்கற ஒண்ணு வால்மிகில இல்லைன்னா, நடுவுல வந்த ரகுவம்சத்தை வேற செக்-அப் பண்ணணும் போல இருக்கே: https://dagalti.blogspot.com/2019/03/blog-post_18.html )
ஒரே ஆயுள்ல....... வாய்ப்பில்லை
Post a Comment