Wednesday, January 07, 2015

அடையாளம்

அடையாளமற்ற ஊரின்
அடையாளமற்ற மதத்தின்
அடையாளமற்ற சாதியைச் சேர்ந்த
அடையாளமற்றவர்களைப் பற்றி
அடையாளமற்ற எழுத்தாளர் எழுதி
அடையாளமற்ற பதிப்பகம் வெளியிட்ட நாவல்
அடையாளமற்ற மொழியின்
அடையாளமாகும்



 

3 comments:

L N Srinivasakrishnan said...
This comment has been removed by the author.
L N Srinivasakrishnan said...

அருமையான கவிதை. அடையாளமற்ற இந்த இலக்கிய சாதனை ஃபாஸிஸ இயக்கங்களில் எரிபடும் புத்தகங்கள் பட்டியலில் வருமா அல்லது அடையாளமற்று பிழைத்து போகுமா?

இவ்வாறான அடையாளமற்ற இலக்கிய சாதனைகளுக்கும் ஃபாஸிஸ இயக்கங்களில் எரிபடும் புத்தகங்களுக்கும் முற்றிலும் பொருத்தம் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். ஒன்றில் வன்முறையின் தடயம் ஏதும் புலப்படுவதில்லை. மற்றொன்று வன்முறையையே மையமாக கொண்டுள்ளது.

இதைப் பற்றி பேசும்போது ப்ரெக்ட் அவர்களின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதன் தலைப்பு 'Die Bücherverbrennung' i.e., 'Burning of the Books'. தயவு செய்து இதை மொழிபெயர்க்கவும். வாசக பெருமக்களுக்கு ஒரு பெரிய தொண்டாக இருக்கும்.

L N Srinivasakrishnan said...

ப்ரெக்ட் அவர்கள் கூறும் இந்த நிகழ்ச்சியை திருவாளர் ஜான் லெகாரே தமது 'Call for the Dead' என்ற நாவலில் மிக லாகவமாக உபயோகித்து இருக்கிறார்.