நீயும் நானும் கரைந்து போக
உருவமற்ற ஒரு விளிம்பில் ஆத்மா ஊசலாட
நீ எங்கே என்றுனக்குத் தெரியுமா?
நீ யாரென்றுனக்குத் தெரியுமா?
கிசுகிசுக்கப் படும் ஒற்றை வார்த்தைகளில்
சட்டென்று அடக்கப்படும் முனகல்களில், பெருமூச்சுகளில்,
ஒன்றாய் ஏற முயற்சிக்கும் சந்தோஷ சிகரங்களில்
எப்படி விவரிப்பது இந்தச்
செயலை, தேவையை, இதன் முழுமையை?
உயிரே உயிரை ஆராதிப்பதை?
இதயம் முழுதும் நிரம்பி வழிய
மெளனமே சப்தமாய் பரவிக் கிடக்க
வியர்வை மழையில் தேகங்கள் அறுவடை ஆகும் நேரம்
கையோடு கை சேர்ந்து விரல்கள் தீ வளர்க்க
வேத மந்திரங்கள் வியர்வை நனைத்த முணுமுணுப்புகளில் இணைய
இதழ் முத்தங்களே நூற்றியெட்டுத் தோத்திரங்களாக
இதயத்துடிப்பு கோயில் மணியோசையோடு சேர்ந்திசைக்க
உடலே உடலை ஆராதிக்க,
வழிபாடு என்பது என்ன?
ஒரு நொடி மரணம்.
My translation of this poem
13 comments:
Oh, wow! Now if I can only recall my Tamil reading skills learned from reading cinema posters and read what you wrote...
Thanks, Chenthil.
Hi Chen. Yes. Its me Krishnan.
Well, Firefox still doesn't display tamil characters properly :(
Krishnan,
You should enable Unicode in your OS to view tamil unicode fonts.
To enable unicode in your OS visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts
http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help
Fantastic. Loved your take on 'When speech is lost'.
I think you have done a re-take on the poem and not just translated it. Somehow it reads more real in Tamil.
Ayaa surrender! Great take on the original. Some places stood out even better than the original. Changing "outcome" as "muzhumai" was a beauty (a little vairamuthish).
Lalita, I will send a transliterated version to you.
Krishnan, nice to find you. It has been a long time. You can try Saravanan's tips.
Ammani, thanks. The original was a good starting point.
DNA, Nandri.
Chandru sent the transliteration. And I agree with Ammani.
It reads diiferent, and miles better in Tamizh.
Um, that was me.
mm.. a step ahead than the original :)
சில வரிகளை மட்டும் எடுத்து நம்ம சொந்த சரக்குல சேர்த்தியிருக்கேன்.. ;)
@ Ammani
I think it reads more real in Tamil because of the 'Neeyum Naanum.' It gives it more immediacy, perhaps?
L, thanks for the appreciation. Most of us(who comment here), think in Tamil, so there is an intimacy with the translated version.
Raasaa, thanks.
Can you post the transliterated version here please
Yup, Chenthil. Post a transliterated version, please, please.
Post a Comment