Sunday, December 22, 2019

QUIT 3 - Day 1

Long term readers of this blog (all 3 of you) might remember my QUIT program. QUarter India Trip. Since India is too big a country to cover in one road trip, I and my wife decided to take bite sized trips and try to see as much of this country as we can.

QUIT 1 was in 2016 covering bits of coastal Maharashtra and Gujarat. QUIT 2 in 2017 was Coastal Andhra Pradesh and Chattisgarh. 2018 was a break year. Our feet has been itching to go on a road trip for quite some time. So here we are with QUIT 3, 2019.

Every journey starts afresh


Started from home at 5.40 AM. In the last few months I have traveled Chennai - Bangalore route so often that it has become muscle memory to me. First pit stop was at Sai Sangeeth Restaurant after Chennasamudram Toll plaza. Pongal, Sambar Vadai and Coffee. I have been a regular here. They are consistently good.

After breakfast she said "I'm feeling tired. Want to sleep. Tell me some story. Your voice puts me to sleep". Last few months have been hectic for her in work front. Almost daily US call as the middle of the night. She needed to rest a bit.

"What story to say? I can't think of any" I said.

"Whatever. I need to hear something in your voice for me to sleep" she replied.

Gaana Bala was crooning "என் வீட்டுல நான் இருந்தேனே " in the audio system. The song is from the movie "இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா".

"You know writer Thi Janakiraman, right. His famous novel Mogamul (Thorn of Passion) is about a youth, Babu, falling in love with an older woman, Yamuna. He is torn between passion and guilt. This keeps him in a constantly flustered state of mind. Yamuna understands this and finally gives in to him. After the consummation, she asks him simply " இதுக்குத் தானே பாபு" (It was just for this right, Babu?). It is one of the powerful dialogues in Tamil novels. Writer Balakumaran, who fancied himself as a writer in Thi Janakiraman mould, used this as the title to his memoir. "இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா". It is from that memoir this movie has been named"

She had fallen asleep, probably by the second sentence.

We stopped at Shree Rathna restaurant before Tumkur for lunch. Strictly average food, but the restaurant was clean. Can't ask for more than that in the highways. Roads were pretty decent upto Chitradurga. We had visited the Chitradurga fort during our last trip. So this time decided to go to Chandravalli caves in Chitradurga.

The Chandravalli caves are about 3 km from the town of Chitradurga. A temple is built between two monolithic rocks. The caves are 80 feet deep and accessed via an entrance in the temple. You have to take the help of a guide to go in. You can see where the idols were placed inside the cave. The guide will tell you stories about Kings who patronised the cave temple. At one place you have to crawl in all fours to reach one chamber from the other. It is a bit claustrophobic, but worthwhile. Took us about half an hour for the cave tour.

Lake in front of Chandravalli Caves

Monolithic Rocks at the Caves
Road work is going on from Chitradurga to Davanegere. We had to take diversions at a couple of places. Reached Davenegere by evening. And promptly had a Benne Dosa at a Sri Guru Kottureswara Benne Dosa joint. Multiple shops have that name here. As long as the dosa is crispy, drips of butter and the chutney is spicy enough to prick your tongue, it doesn't matter whether it is the original shop or not.

Benne Dosa (Butter Dosai)

Sri Guru Kottureshwara Butter Hotel, opposite to Bapu Dental College


Total distance traveled : 620 km. Driving time : 9 hrs.

Saturday, December 14, 2019

எழுத்தாளனின் அகம்

நேற்றிரவு ரயிலில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது Kindle ல் ஹருகி முரகாமியின் 'What I talk about When I talk about Running' புத்தகத்தை மீண்டும் ஒருமுறை படித்தேன்.

முரகாமி புகழ்பெற்ற எழுத்தாளர் மட்டுமல்ல, மராத்தான் ஓடுபவரும் கூட. தனது முப்பத்திரண்டாம் வயதில் ஆரம்பித்து இது வரை (அவருக்கு தற்போது அறுபத்தி எட்டு வயது) ஆண்டுக்கு ஒரு மராத்தான் (42.2 கிமீ) பந்தயத்தில் பங்கேற்றிருக்கிறார்.

அவரது புத்தகங்களில் என் மனதுக்கு நெருங்கிய புத்தகம் இது. கடந்த ஒரு வருடமாக நானும் ஓட ஆரம்பித்திருப்பதும் ஒரு காரணம். ஓட்டத்தைப் பற்றி மட்டுமல்லாமல் அவரது எழுதுமுறை பற்றியும் விவரித்திருப்பார் , அவருக்கே உரிய அடக்கமான நடையில். கீழ்க்கண்ட பத்திகளில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது எழுதும் போது வரும் வாதையைத் தவிர்க்க உதவுகிறது என்று கூறுகிறார்.

While I was running, some other thoughts on writing novels came to me. Sometimes people will ask me this: “You live such a healthy life every day, Mr. Murakami, so don’t you think you’ll one day find yourself unable to write novels anymore?” People don’t say this much when I’m abroad, but a lot of people in Japan seem to hold the view that writing novels is an unhealthy activity, that novelists are somewhat degenerate and have to live hazardous lives in order to write.

There’s a widely held view that by living an unhealthy lifestyle a writer can remove himself from the profane world and attain a kind of purity that has artistic value. This idea has taken shape over a long period of time. Movies and TV dramas perpetuate this stereotypical—or, to put a positive spin on it, legendary—figure of the artist.

Basically I agree with the view that writing novels is an unhealthy type of work. When we set off to write a novel, when we use writing to create a story, like it or not a kind of toxin that lies deep down in all humanity rises to the surface. All writers have to come face-to-face with this toxin and, aware of the danger involved, discover a way to deal with it, because otherwise no creative activity in the real sense can take place. (Please excuse the strange analogy: with a fugu fish, the tastiest part is the portion near the poison—this might be something similar to what I’m getting at.) No matter how you spin it, this isn’t a healthy activity.

So from the start, artistic activity contains elements that are unhealthy and antisocial. I’ll admit this. This is why among writers and other artists there are quite a few whose real lives are decadent or who pretend to be antisocial. I can understand this. Or, rather, I don’t necessarily deny this phenomenon.

But those of us hoping to have long careers as professional writers have to develop an autoimmune system of our own that can resist the dangerous (in some cases lethal) toxin that resides within. Do this, and we can more efficiently dispose of even stronger toxins. In other words, we can create even more powerful narratives to deal with these. But you need a great deal of energy to create an immune system and maintain it over a long period. You have to find that energy somewhere, and where else to find it but in our own basic physical being?

இன்று காலை எதேச்சையாக ஜெயமோகன் கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. யாரோ முகநூலில் பதிந்திருந்தார்கள்.  அவரும் எழுத்தாளனின் அகம் பற்றிக் கூறுகிறார்.

கலைஞனின் மனம் என்ற விஷயத்தைப் பற்றி நான் எப்போதுமே சிந்தனை செய்வதுண்டு. அவன் கட்டுப்பாட்டில் இல்லாமலிருக்கும் போதுதான் அது படைப்பூக்கத் தன்மையுடன் இருக்கிறது. ஆகவே மனதை அதன்வழி போக விட்டால் மட்டுமே அவனால் நல்ல படைப்புகளை கொடுக்க முடியும். ஆனால் மனதை அதன் வழியே போகவிடுபவன் இச்சைகளை பின் தொடர்வான். இச்சைகளை பின் தொடர்பவன் உறவுகளை இழப்பான். பொய்யனாவான். பிறர் உணர்ச்சிகளை எப்படியோ சுரண்டுவான். அநீதிகளை எங்கேனும் செய்தேயாவான்.

எட்கார் அல்லன் போ முதல் இன்றுவரை புகழ்பெற்ற ஐரோப்பிய எழுத்தாளர்கள் கலைஞர்கள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கட்டற்றதாக, அநீதியும் குரூரமும் கலந்ததாக இருப்பதற்கு காரணம் இதுவே. அவர்கள் செய்பவற்றின் மேல் அவர்களின் பிரக்ஞைக்குக் கட்டுப்பாடு இல்லை. அறம், நீதி ,நாகரீகம் என்பதெல்லாம் பிரக்ஞைகள். ஆழ்மனம் ஓர் அபூர்வமான, மகத்தான விலங்கு. அவர்களின் எழுத்தில் அழகும் மானுட அறமும் வெளிப்படும் போது தனிவாழ்க்கை வேறெங்கோ இருந்துகொண்டிருக்கும்.

நானும் கட்டற்றவனாக இருந்தேன். அறவுணர்வு எனக்கிருந்தது. ஆனால் இங்கிதம் இல்லை. குரூரம் இருந்தது. நெருங்கிய ஒவ்வொருவரையும் புண்படுத்துபவனாக இருந்தேன். அப்படியே சென்றிருந்தால் நான் ஒரு பி.கெ.பாலகிருஷ்ணனாக ஆகியிருப்பேன். யார் கண்டது, ஜி. நாகராஜன்கூட ஆகியிருப்பேன். மனைவியை துரத்திச் சென்று நெருப்பு வைத்து கொளுத்திய ஜி. நாகராஜன்!

பல கலைஞர்களின் லௌகீகமான தோல்வி தங்களை கட்டற்ற ஆளுமைகளாக ஆக்கிக் கொள்வதில் இருக்கிறது. அந்த ஆளுமையை அவர்கள் பிறர்மேல் சுமத்துகிறார்கள். வேண்டியவர்களை கொடுமைக்குள்ளாக்குகிறார்கள். சகமனிதர்களை புண்படுத்துகிறார்கள். அதன்மூலம் உருவாகும் லௌகீகப்பிரச்சினைகளால் அவர்களின் கலையும் வீழ்ச்சியடைகிறது. அதனால் மனமுடைந்து தங்களைத் தாங்களே அழிக்கிறார்கள். ஒருவகை வன்மத்துடன் அந்த அழிவை தாங்களே முழுமை செய்துகொள்கிறார்கள்.

தன்னை மீட்டது தான் மனைவி மேல் கொண்ட பெருங்காதலும் தன் குருவும் என்று ஜெயமோகன் கூறுகிறார்.  https://m.jeyamohan.in/11693

ஒரே நாளில் இரண்டும் கண்ணில் பட்டது தன்னியல்பாக நடந்தது என்றாலும் 'அட' போட வைத்தது.

Saturday, May 11, 2019

நறவு உண்டு நிறைகின்றேன்


தெளிந்து தீவினையைச் செற்றார்
      பிறவியின் தீர்வர்'' என்னா,
விளிந்திலா உணர்வினோரும்,
      வேதமும், விளம்பவேயும்,
நெளிந்து உறை புழுவை நீக்கி,
      நறவு உண்டு நிறைகின்றேனால் -
அளிந்து அகத்து எரியும்
      தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்.

என்னமா எழுதியிருக்கான். கிட்கிந்தா காண்டத்துல வாலி செத்ததுக்கப்பறம் ராஜாவான சுக்ரீவன் சீதையைத் தேடித் தரேன்னு ராமனுக்குக் கொடுத்த வாக்கை மறந்து மப்புல கிடக்கான். ராமன் கோபமா லட்சுமணனை அனுப்பறான். இவனால எந்திரிக்கவே முடியலை. அனுமான் டெக்னிக்கா தாரை தலைமைல மகளிர் அணிய அனுப்பி லட்சுமணன் கிட்ட பேசி சமாதானப் படுத்தறான்.

அங்கதன் வந்து திரும்பவும் சுக்ரீவன எழுப்ப, ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலைன்றான். அங்கதன் “உன்ன எழுப்ப முடியல, கட்டிங் போட்டுட்டு குப்புற அடிச்சுக் கிடந்த”ங்கறான். அப்ப சுக்ரீவன் கழிவிரக்கத்துல சொல்ற பாட்டு இது.

    
அளிந்து அகத்து எரியும்
      தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்.
நறவு உண்டு நிறைகின்றேன்

வீட்ல கொழுந்து விட்டு எரியற தீயை நெய் ஊத்தி அணைக்க முயற்சி பண்றது மாதிரி, கட்டிங்க போட்டு நிம்மதியா இருக்க நினைக்கிறேன். அது இன்னும் பத்திட்டு எரியுது.

எத்தனை வருஷம் வேணுமோ இதுல மூழ்கி முத்தெடுக்க.
   


   
   

Thursday, April 25, 2019

கணுவில்லாக் கன்னல்

”அண்ணா, ’கணுவில்லா கண்கள்’ ந்னு ஒரு பாட்டுல வருது. என்ன அர்த்தம்” வாட்சப்பில் சித்தி பையன் கேட்டான். அவனுக்கு பாடலாசிரியர் தாமரை எழுதிய பாடல்கள் என்றால் உயிர். புரியாத சொற்களுக்கு என்னிடம் அவ்வப்போது பொருள் கேட்பான்.

’கணுவில்லாக் கண்கள்’. பொருளேயில்லையே என்று யோசித்தேன். கூகிளின் உதவியோடு தேடிப் பார்த்ததில் ‘நண்பேண்டா’ திரைப் படத்தில் வரும் ’நீராம்பல் பூவே’ பாடலில் வரும் வரி என்று தெரிந்தது. இணையப் பாடல் வரிகள் தளங்களில் ‘கணுவில்லாக் கண்ணால்’ என்று இருந்தது. ஒருவேளை ’கணுவில்லாக் கண்ணாளோ’? கண்ணில் ஏது கணு?

“கணு ன்னா joint / node. ’கணுவில்லாக் கண்ணால் / கண்ணாள்’ ன்னா பொருளே இல்லைடா. புரியலையே” என்று பதில் அனுப்பினேன்.

“அதான் உங்கள்ட்ட கேட்டேன்”

மானப் பிரச்சினை ஆகிவிட்டது. தாமரை தவறாக எழுதியிருக்க வாய்ப்பில்லை. யூட்யூப் சென்று பாடலைப் பார்த்தேன். நயன்தாராவைப் பார்த்து உதயநிதி பாடிக் கொண்டிருந்தார். பாடல் உச்சரிப்புத் தெளிவாகவே இருந்தது.

’கால் கொண்ட மின்னல்
கணுவில்லாக் கன்னல்..’

அடப்பாவிகளா. கன்னல் (கரும்பு) என்பதைத் தான் கண்கள் / கண்ணால் என்று மாற்றிவிட்டீர்களா.

தமிழ்ப்பாடல் வரிகள் தளங்களை நம்பவே நம்பாதீர்கள். ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்.  விபரீதப் பொருள் கொண்டு வந்து விடுவார்கள்.

Wednesday, February 20, 2019

பேரம்

”அண்ணே நான் முத்து பேசறேன். லேலண்டு வண்டி இஞ்சின் மாத்துனோம்ல, அதுக்கு ஸ்டீரிங் பம்ப்பு ஹோஸ் வாங்க வந்தேன். 5400 ரூபா சொல்றாங்க”

“ரொம்ப அதிகமாயிருக்கே. விலை கேட்டுப் பாத்தியா?”

“கேட்டேண்ணே. நறுசா கொறைக்க மாட்டேன்றாரு”

“சரி, ஃபோன கடக்காரர்ட்ட கொடு. நான் பேசிப் பாக்கறேன்”

ஃபோனை வாங்கியவர் உடனே பேச ஆரம்பித்தார்

“அண்ணாச்சி, ஸ்பேர் பார்ட்ஸ்ல லாபம் ஒண்ணுமில்ல. ஒரு நாளைக்கு ஐந்நூறு நிக்கும், ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் நிக்கும். மாசம் இருவதாயிரம் நின்னா பெரிய விஷயம். இதுல குறைச்சுக் கேக்காதீக”

“இல்லண்ணே. டிரான்ஸ்போர்ட் தொழில் முன்ன மாதிரி இல்ல. ஒவ்வொர் ரூவாய்க்கும் கணக்குப் பாக்க வேண்டியிருக்கு. நீங்க பாத்து சொல்லுங்க. 5200 போட்டுக்கங்க”

“இல்லண்ணாச்சி. கட்டுப்படியாவாது. நானும் லாரி வச்சிருந்தவன் தான். வச்சுக்க முடியாம கொடுத்துட்டு தான் இதுக்கு வந்தேன்”

“நீங்க வச்சுக்க முடியாமக் குடுத்துட்டீங்க. நாங்க குடுக்க முடியாம வச்சிருக்கோம். அவ்வளவு தான் வித்தியாசம். பாத்து சொல்லுங்க”

எதிர் முனையில் இருந்தவர் வாயடைத்துப் போய்விட்டார். சற்று நேர அமைதிக்குப் பின் “சரி அண்ணாச்சி. 5300 தாங்க.”

இப்படிப் பட்டவர்கள் உங்களிடம் வேலைக்கு இருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை விட்டுவிடாதீர்கள்.