Wednesday, August 01, 2018

கனவினுள் ஒரு கனவு - A Dream Within a Dream

My translation of Edgar Allan Poe's poem 'A Dream Within A Dream'

கனவினுள் ஒரு கனவு

வா, நெற்றியில் இம்முத்தத்தை வாங்கிக்கொள்!
உன்னை விட்டுப் பிரியும் இவ்வேளையில்
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லுகிறேன் -
என் நாட்களெல்லாம் வெறும் கனவுகளே என்று
நீ நினைப்பதில் தவறொன்றுமில்லை;
நம்பிக்கை காற்றோடு போய்விட்டதென்றால் -
அது பகலிலோ, இல்லை இரவிலோ
அகக் காட்சியிலோ, இல்லை அரூபமாகவோ -
போனது போனது தானே?
நாம் காண்பதெல்லாம்,
மெய்யாய்த் தோன்றுவதெல்லாம்,
கனவினுள் ஒரு கனவன்றி வேறில்லை.

அலை மோதும் கரையின்
ஆரவாரத்தினூடே நிற்கிறேன்;
என் கைப் பிடிக்குள் பொன்நிற மண் துகள்கள் -
எண்ணுமளவில் தான்!
ஆனாலும் விரலிடுக்குகளின் வழியே
ஒவ்வொன்றாய் நழுவிச் செல்கின்றன,
நான் அழும் போதே,  நான் அழும் போதே!
கடவுளே! இவற்றை இன்னும் இறுக்கமாய்
நான் பிடித்துக் கொள்ள முடியாதா?
கடவுளே!  இரக்கமற்ற அலைகளிலிருந்து
 ஒரு துகளையாவது காக்க முடியாதா?
நாம் காண்பதெல்லாம்,
மெய்யாய்த் தோன்றுவதெல்லாம்,
கனவினுள் ஒரு கனவன்றி வேறில்லையா?

A Dream Within a Dream

Take this kiss upon the brow!
And, in parting from you now,
Thus much let me avow —
You are not wrong, who deem
That my days have been a dream;
Yet if hope has flown away
In a night, or in a day,
In a vision, or in none,
Is it therefore the less gone?
All that we see or seem
Is but a dream within a dream.

I stand amid the roar
Of a surf-tormented shore,
And I hold within my hand
Grains of the golden sand —
How few! yet how they creep
Through my fingers to the deep,
While I weep — while I weep!
O God! Can I not grasp
Them with a tighter clasp?
O God! can I not save
One from the pitiless wave?
Is all that we see or seem
But a dream within a dream?

No comments: