Thursday, October 03, 2013

Chess (II) - Jorge Luis Borges

CHESS (II)
Faint-hearted king, sly bishop, ruthless queen,
Straightforward castle, and deceitful pawn -
Over the checkered black and white terrain
They seek out and begin their armed campaign.

They do not know it is the player's hand
That dominates and guides their destiny.
They do not know an adamantine fate
Controls their will and lays the battle plan.

The player too is captive of caprice
(The words are Omar's) on another ground
Where black nights alternate with whiter days.

God moves the players, he in turn the piece.
But what god beyond God begins the round
Of dust and time and sleep and agonies?

My translation:

ஸ்திரமில்லா மன்னன், குறுக்காய்ப் பாயும் தேர், தீர்க்கமான  அரசி
ஸ்திரமில்லா ராஜா, குறுக்காய்ப் பாயும் தேர், இரக்கமில்லா ராணி
நேராய்ப் போரிடும் யானை, கள்ளமிக்கப் படை வீரன் -
கறுப்பு வெள்ளைக் கட்டமிட்ட களத்தில்
இறங்கி சமராடத் தொடங்கினர்.
 
அவர்களுக்குத் தெரியாது, சதுரங்க வீரனின் கைகளுக்குக்
கட்டுப்பட்டது அவர்கள் இலக்கு என.
அவர்களுக்குத் தெரியாது, மாற்றவியலா விதி
தீர்மானிக்கும் அவர்கள் போக்கையும் போர்த் திட்டத்தையும் என.

சதுரங்க வீரனும் கணிக்கவியலா விதியின் கைதியே
(உமரின் வார்த்தைகள் இவை*) வேறொரு களத்தில்,
கறுப்பு இரவுகளும் வெள்ளைப் பகல்களும் அடுத்தடுத்து வரும் இடத்தில்.

கடவுள் வீரனை ஆட்டுவிக்கிறான், வீரன் சதுரங்கக் காய்களை.
ஆனால் கடவுளுக்கு மேலான எந்தவொரு கடவுள் துவக்கி வைக்கிறான்
மக்கிப் போன காலமும், நித்திரையும், துன்பமும் நிறைந்த ஆட்டத்தை?


* - It is about Omar Khayyam's words
"But helpless pieces in the game He plays,
Upon this chequer-board of Nights and Days"

3 comments:

Anonymous said...

Really interesting.. but is ruthless queen " deerkamana arasi"?

Chenthil said...

Thanks Anon. You are right. I changed to இரக்கமில்லா - which actually goes better with ஸ்திரமில்லா.

Anonymous said...

The first poem is Borges as translated by Alastair Reid, whose translation is metrical and lyrical, setting a good example for us all.